செம்பருத்தி மருந்துகள்

செம்பருத்தி பூ இதன் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள், மருந்து செய்முறை இவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செம்பருத்தி பூவில் சில வேதியல் அமிலங்கள் காணப்படுகிறது அவை நமது உடலுக்கு நோய் அகற்றும் சக்தியை வழங்குகிறது. அவற்றில் முக்கியமானவை குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் போன்ற வேதிப் பொருட்களாகும்.

செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மிகவும் அழகானது. பூஜைக்கு வீடுகளில் பெருவாரியாக பயன்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாகக் கூறுகின்றனர்.  இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். வைத்தியத்துக்கும் சிறப்பானது அதோடு மட்டும் இதை பற்றி சொல்ல முடியாதுங்க அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான் இது பருத்தி வகையைச் சேர்ந்த செடிங்க என்ன இதோடு முடியலங்க இன்னும்  இருக்கு சொல்லுறேன் கேளுங்க.

 இதன் இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைமுடி உதிர்தலை நிக்கி முடி வளரவும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவையாகும்

முடி வளச்சிக்கான தைலங்கள் தயாரிப்பதற்காக செம்பருத்தி பூவின் இலைகள் மற்றும் பூக்கள் பெரிதும் பயன்படுகிறது.

 செம்பருத்தி பூவையும் அதன் இலைகளையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி மென்மையாகும் முடி அழுக்குகள்  இல்லாமல் உடையாமல் வளரும்.

காலையில் எழுந்ததும் 5 பூக்களின் இதழ்களை மென்று தின்றுவிட்டு அதன் பிறகு சிறிது வெதுவெதுப்பான நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும்.  வெள்ளைப்படுதல் நின்றுவிடும்.  உடலில் இரத்தம் சுத்தமாகும். இதயமும் வலுப்பெறும்.

 400ml (மில்லி) நல்ல எண்ணெய் 100 கிராம் (கிராம்) செம்பருத்திப்பூ இதழ்களைப் போட்டு இவை அனைத்தையும் கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடி அதை கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்துவிட வேண்டும். பின்னர் அதை காலை மற்றும் மாலை வேளையில் திறந்து கலக்கிவிட்டு திரும்பவும் மூடவும்.  எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும்.  இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது.  செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமமாகும். பெண்கள் வீட்டிற்கு விலக்காகும் காலத்தில் அதிக இரத்தப்போக்கு இருந்தால் மூன்று மலர்களை நெய்யில் வதக்கி அதை உண்டால் உடனே குணமாகும்.

காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகள், சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வரப் பேன், பொடுகு அகலும்.

செம்பருத்தி பூ ஒரு 5 எடுத்து அதில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு சுண்ட பாதியாக காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள்.தாகம் எடுக்கும் போது இதை குடித்துவர உடல் சுடு குறையும் சாதாரண காய்ச்சலுக்கு இந்த தண்ணீரை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

செம்பருத்தி பூவை துங்கி எழுந்தவுடன் காலையில் ஒரு கப் பசும் பாலுடன் நாற்பது நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர  உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகி எந்த நோய் இருந்தாலும் அது குணமாகிவிடும்.

 செம்பருத்திப்பூ ஒரு 250 கிராம் (கிராம்) எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி அதை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும் பின்னர் ஒரு 50 கிராம் (கிராம்) எலுமிச்சம் பழச்சாறை அதில் நன்கு கலந்து காலை வெயிலில் வைத்து பின் மாலையில் அதை நன்கு பிசையவும் அதிலிருந்து சிவப்பாக வரும் சற்றை எடுத்து அதனோடு தேவையான அளவு சர்க்காரை சேர்த்து காய்ச்சி(நீர் சேர்க்க வேண்டாம்)சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும்.  இதை தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடம்பில் இரத்தம் சீரான முறையில் பரவும் மேலும் இதயமும் பலம் பெறும்.

 இரவு தலையில் செம்பருத்திப் பூவை வைத்து படுத்தால் பேன் தொல்லை குறையும் பேன்கள் அழிந்துவிடும் இதை தொடர்ந்து நான்கு நாட்கள் செய்ய வேண்டும்.

 நமது வீட்டிற்கு அழகையும் நோய்க்கு மருந்தையும் பூஜைக்கு மலர்களையும் தரும் செம்பருத்தி பூவை கட்டாயம் வீட்டில் வளர்க்க வேண்டும். தினமும் வெறும் வயிற்றில் ஒரு பூவை சாப்பிட்டு வந்தாலே இதய கோழாறுகளை சரி செய்து இதயத்தை பலபடுத்துகிறது. 
வளர்க்க இடமில்லைனா மாடியில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்த்து இதன் பயனை அனைவரும் பெறுங்கள்.
புதியது பழையவை