Lord Siva bull in tamil  Tamil bakthi news website
சிவப் பெருமானின் வாகனம் நந்திதேவர் பிறப்பு கதை.

நந்தியின் முழு வாழ்க்கை வரலாறு தெரியுமா.

 Full History of Nandi lalso known as Nandikeshwara or Nandideva,Lord Shiva Vahana bull.

நந்தீஸ்வரர் மக்களால் நந்தி என்றும் நந்திதேவர் என்றும் மக்களால் வணக்கப்படுகிறார். இந்து மதத்தில், சிவன் கோவிலுக்குள் நுழைவதற்கு முன் சிவப் பெருமானின் அருளை பெற அவரை வணங்க நந்தியின் அனுமதியைப் பெற வேண்டும் என்று நம்பப்படுகிறது. நந்தீஸ்வரர் காளையின் தோற்றத்தில் திருக்கோயில்களில் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு சிவன் கோயிலில் நந்தியின் சிலையைக் காணலாம், அது எப்போதும் சிவலிங்கத்தின் தரிசன வரிசையில் எதிராக இருக்கும்.

நந்தீஸ்வரர் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் இருப்பிடமான கைலாசத்தின் வாயில் காவலர் ஆவார். மேலும் நந்தி தேவர் சிவபெருமானின் வாகனமாவர். இந்து சைவ மதத்தின் ஒரு பிரிவான நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்களின் தலைமை குருவாகவும் நந்தி கருதப்படுகிறார்.


Nandi arul petra thirumoolar. Nandi kathai, நந்தி கதை
நந்தி பகவானிடம் திருமூலர் ஆசிபெறுகிறார்.

நந்திதேவரின் எட்டு சீடர்கள் யார் யார் ? 

இந்து சைவ சித்தாந்த மரபின் படி, நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்கள் சைவ சமயத்தை பரப்புவதற்கு அனுப்பப்பட்டனர். அந்த  சீடர்களின் பிரதான குருவாக நந்தி தேவர் கருதப்படுகிறார். அவர்களின் பெயர்கள்  சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோகா முனி ஆகியோர் ஆகும் இந்த  எட்டு சீடர்களும் இந்து  சைவ சமயத்தை பரப்புவதற்கு எட்டு வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.


Lord Nandi History in Tamil. Tamilbakthinews.in

நந்தியின் பிறப்பு வரலாறு.

நந்தியின் பிறப்பு பிரபலமாக அறியப்படாத ஒன்றாகும், ஆனால் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று! சிவப் பெருமானுக்கு  கைலாசத்தில் தொண்டு புரிந்து கொண்டிருந்தவர் வீதஹவ்யர் முனிவர். சிவப் பெருமானின் ஆணைப்படி ஒரு சமயம் எமனுடன் நரகத்தை சுற்றி பார்த்து கொண்டிருந்தார் அப்படி நரகத்தை சுற்றி வந்தபோது வழியில் தெரிந்த ஒரு கல் குன்றை பார்த்து அதைப் பற்றி விசாரித்தார். அதற்கு எமன், சுவாமி! தாங்களுடைய முந்தைய பிறவியில் பசித்தவருக்கு அன்னதானம் செய்தீர்கள். ஆனால் அவர்களுக்கு கல் மண் நீக்காது அலட்சியமாகச் சமைத்து அன்னதானம் அளித்ததன் பலன் இப்படிக் மண் குன்றாக உள்ளது என்று கூறினார்.

"அதாவது யார் எமலோகத்தை சுற்றி பார்க்கிறாரோ அவரது பாவ புண்ணியங்கள் வெளிப்படும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது."

இதைக் கேட்ட வீதஹவ்யர் என்ன சொல்கிறீர் என் அலட்சியத்தால் உருவான பாவ மலையா என அதிர்ச்சியாக கேட்டார் பின் எம தர்மர் விளக்கம் கொடுக்கவே முன் பிறவியில் செய்த பாவங்கள் தான் இதற்கு காரணம் என அறிந்த வீதஹவ்யர் இந்த பாவ மலையை நான் உண்டே கரைப்பேன் என்று சபதம் போட்டார்.

மேலும் தொடர்ந்து நரகத்தில் பயணித்தார் வீதஹவ்யர் அப்போது ஓரிடத்தில் சில பெரியவர்கள் பசி மற்றும் தாகத்தால் அவதிப்படுவதை வீதஹவ்யர் கண்டார். அவர்களிடம் சென்று காரணத்தை விசாரித்த போது . அவர்கள் முனிவரே  எங்களுக்கு நீர் வார்த்து தர்ப்பணம் செய்து கரையேற்றப் புத்திரர்கள் இல்லாத காரணத்தால் இப்படி அவதிப்படுகிறோம் என்று மிகுந்த வேதனையாக சொன்னார்கள்.

இதைக்  கேட்டு தெரிந்துக் கொண்ட வீதஹவ்யர் கவலைப்படாதீர்கள் பெரியவர்களே உங்களின் இந்த கஷ்டத்தை நான் போக்குகிறேன் என்றார். நரகத்தில் இவ்வாறாக துன்பபடுவது தன்னுடைய முன்னோர்கள் என்பதை வீதஹவ்யர் தெரிந்துக் கொண்டார் அதனாலேயே இப்படியொரு சபதத்தையும்  அவர் எடுத்துக்கொண்டு கைலாயத்திற்க்கு சென்றார்.

திரும்பவும் கையிலைக்கு வந்து எம்பெருமானே எனது பாவ மலையைக் கரைக்கவும் எனது முன்னோர்களை துன்பத்திலிருந்து மீட்க புத்திரனைப் பெற நான் உடனே பூலோகத்திற்க்கு செல்ல எனக்கு அருள்புரியுங்கள் பகவானே என்று வேண்டி கேட்தன் பெயரில் சிவபெருமானும் ததாஸ்து பவ. என்ற மந்திரத்தைச் சொல்லி வாழ்த்தி அனுப்பினார். அடுத்த பிறவியில் வீதஹவ்யர் திருவையாற்றில் அந்தணர் குலத்தில் பிறந்தார்.

விவரம் தெரிந்த நாள்முதல் கல்லை உணவாக உண்டார். அதனால் சிலாதர் எனும் பெயர் பெற்றார். அவரது பாவமும் தொலைந்தது. சிலாதர் சித்திரவதி என்னும் உத்தமியை மணந்தார்.

சிலாத முனிவர் தீவிர சிவபக்தராக திகழ்ந்தார். அவருக்கு சொந்த குழந்தைகள் இல்லை. நம் குலம் விளங்கப் பிள்ளை இல்லையே! என்று அவரது மனைவி  சித்திரவதி வருத்தப்பட முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய புத்திரன் வேண்டும்மென சிலாத சிவப் பெருமானை வேண்டி தவம் செய்தார். சிவபெருமானை மகிழ்விப்பதற்காக வருடக்கணக்கில் தவம் செய்தார், அவரைச் சுற்றி கரையான்கள் தங்கள் வீடுகளைக் கட்டி அவரை உண்ணத் தொடங்கின இருந்தும் தியானத்தை கைவிடாமல் தொடர்ந்தார், சிலாத முனிவரின் பக்தியால் இறைவன் மகிழ்ச்சியடைந்தார் தன்னை மறந்து அவருக்குக் காட்சி தந்தார். தவத்தால் மகிழ்ந்த சிவப் பெருமான் சிலாதரிடம் என்ன வரம் வேண்டுமென கேட்டார். தெய்வமே என் குலமும் உலகமும் உய்யவும், சிவநெறி ஈடேறவும் உங்கள் அம்சம் நிறைந்த அழிவில்லாத ஒரு புதல்வனை அருள வேண்டுமென பக்தியோடு கேட்டார் சிலாத முனிவர். அதற்கு சிவப்பெருமான் சிலாதா முனிவரே சைலமலையில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யுங்கள் உமக்கு என் அம்சம் மிக்கப் புதல்வன் தோன்றி அவனால் உன் குலம் புகழில் ஓங்கும் என கூறி ஆசிர்வதித்து வரம் கொடுத்து மறைந்தார்.


மகா தவத்தால் பிறந்த நந்தி பகவான்.

சிவப் பெருமானின் வரத்திற்கு பிறகு யாகத்தை நல்லபடியாக முடித்தார் சிலாதா முனிவர் அடுத்த நாள் சிலாதார் விவசாயம் செய்ய நிலத்தை உழும்போது தங்கப்பேழை ஒன்றை கண்டார். அதை திறந்து பார்த்தப் போது போது சூரியனைப் போல் பிரகாசிக்கும் ஆண் குழந்தையைக் கண்டார். சிலாதரும் அவரது மனைவியும் ஆ! என்ன இது ஆச்சரியம் என்று வியப்புடன் பார்த்தனர்! ஆஹா, சிவனருளால் நம் கலி தீர்க்க வந்த தவப்புதல்வன் இவன் தான் என்று சிலாதர் மனைவி சொன்னதும் சிலாத ரும் ஆம் தேவி சிவனருளால் வந்த இவனை ஜபேஸ்வரன் என்றே அழைப்போம் என கூறினார்.


ஜபேஸ்வரன் நந்திதேவர் ஆன கதை.

 சிலாத முனிவர் அந்த குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஜபேஸ்வரன் என பெயர் சூட்டி தன் குழந்தையாக மிகவும் நன்றாக சிறப்பாக வளர்த்து வந்தார்.


Nandi kathai, நந்தி கதை, சிவப்பெருமான் வரலாறு,தமிழ் பக்தி நியூஸ்
கலைகளில் சிறந்து விளங்கிய நந்தி பகவான்.

 ஜபேஸ்வரன் சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதம் புரணங்களை கற்று தனது ஏழு  வயதிலேயே ஞான பண்டிதரானார். மேலும் அவருக்கு சனாதன தர்மத்தின் மீது அபரிமிதமான அறிவு இருந்தது, அத்தகைய இளமை பருவத்திலேயே எது சரி எது தவறு என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும் ஜபேஸ்வரன் மருத்துவம், நடனம், பாடல், சண்டை போன்ற பல கலைகளில் தேர்ச்சி பெற்றவராக திகழ்ந்தார். ஜபேஸ்வரன் சிவபெருமானின் சிறந்த பக்தராக மாறினார் எப்போதும் சிவபெருமான் எண்ணத்தில் மூழ்கியிருந்தார். 

தன் மீது சிறந்த பக்தி வைத்திருந்த ஜபேஸ்வரன் மீது பற்று கொண்ட சிவப் பெருமான் இனி மக்கள் ஜபேஸ்வரனை நந்தி தேவர் என அழைக்குமாறு வானத்திலிருந்து அசீரியாக ஒலித்தார். இதனால் ஆனந்தமடைந்த சிலாத முனிவர் புத்திசாலித்தனமான குழந்தையைப் பரிசளித்த இறைவனுக்கு தினமும் நன்றி தெரிவித்தார்.


நந்தி என்றால் என்ன பொருள். 

நந்தி என்றால் சமஸ்கிருதத்தில் மகிழ்ச்சி, இன்பம், திருப்தி என்று பொருள்.

நந்தியை ஆசீர்வதிக்க தயங்கிய தேவர்கள்.

ஒருமுறை, மித்திரன், வருணன் ஆகிய இரு தேவர்கள் சிலாதாவின் வீட்டிற்கு வருகை தந்தனர்.  சிலாதா தனது மகன் நந்தியை விருந்தினர்களுக்கு முறையான உபசரிப்பு வழங்குமாறும் கட்டளையிடுகிறார்.  நந்தி முனிவர்களை உரிய மரியாதையுடன்உபசரித்து, விருந்தினராக அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தார்.

மித்ரா மற்றும் வருண தேவர்கள் நந்திதேவரின் உபசரிப்பில் ஈர்க்கப்பட்டனர் மற்றும் நந்தி அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். அப்போது தேவர்கள் நந்தியை அரை மனதுடன் ஆசீர்வதிப்பதை சிலாதா முனிவர் கண்டார், இது சிலாதாவை கவலையடைய செய்தது இதனை தொடர்ந்து சிலாதா வீட்டிற்கு வெளியே சென்ற முனிவர்களைக் பின் தொடர்ந்து நந்தி தன்னைப் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின் அந்த இரு தேவர்களிடம் நந்தியை ஆசீர்வதிக்கும் போது ஏன்  சோகமாக அரை மனதுடன் ஆசீர்வதித்தீர்கள் என கேட்டார்.

 தேவர்கள் சிலாதாவின் மீது பரிதாபப்பட்டு, நந்திக்கு நீண்ட ஆயுளை வழங்க முடியாது என்று பதிலளித்தனர். உமது மகனை வாழ்த்துவதற்கு விதிப்படியான அவனது அற்ப ஆயுள் எங்களைத் தடுக்கிறது. என்று தேவர்கள் கூறினர்.

இந்த விஷயம் நந்தி அறியாவண்ணம் சிலாதரும் அவரது மனைவியும் அவனைச் சீராட்டி வளர்த்தனர். ஆனால் ஒரு நாள் தான் அதிக காலம் உயிர் வழமாட்டேன் என கேட்டு தெரிந்திருக்கொண்ட நந்தி புன்னகைத்தார். இந்த கதையில் என்ன வேடிக்கை இருக்கிறது என்று யோசித்தார் சிலாதா முனிவர் அதற்க்கு நந்திதோவர் சிலாதா முனிவரிடம் தனக்காக தவம் செய்து சிவப் பெருமானிடம் வரம் கேட்டதை நந்தி விளக்கினார். இறைவன் உத்திரவாதம் அளித்திருக்கும் போது, ​​ஒரு சில ஞானிகள் சொல்வதைக் கேட்டு எப்படிக் கவலைப்பட முடியும் இளமையிலேயே இறப்பதே தனது விதி என்றால், சிவபெருமானை வேண்டிக் கொண்டு பக்தியுடன் இருந்தால் அந்த விதியை மீண்டும் எழுத முடியும் என்று விளக்கினார் நந்திதேவர்.

விதியை வெல்ல சிவப்பெருமனை வேண்டி கடும் தவம் செய்த நந்திதேவர்.

 சிவப் பெருமான் தனது தூய பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டார் என்றும் அவர் மிகவும் சக்திவாய்ந்த கடவுள் என்றும் மாக சிவபக்தரான சிலாதாவிடம் கூச்சலிட்டார் நந்திதேவர்.

பின்னர் நந்திதேவர் தனது தாய் தந்தையின் வருததத்தை நீக்கவும் நனது விதியை மாற்றவும் சிவப் பெருமானை எண்ணி ஒரு யாகம் செய்ய முடிவு செய்தார், அந்த மகா யாகத்தை முடித்த பிறகு தவம் செய்ய நந்திதேவர் தன் தந்தையிடம் ஆசி கேட்டு புவனா நதிக்கு செல்கிறார். நதியில் மூழ்கி நந்தி பஞ்சாட்சரம் மந்திரத்தை ஜபித்தான். நீர் வாழ் ஜந்துக்கள் அவனைக் கடித்து உதிரத்தை உறிஞ்சின. ஆனாலும் அந்த கடும் தவத்தை கைவிடாமல் சித்தத்தை சிவன்பால் வைத்துத் தவம் செய்தான். சில காலம் கழித்து அவனது ஒப்பற்ற தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் உமையுடன் அவன்முன் தோன்றி அவனைத் தடவிக் கொடுத்தார். உடனே அவன் உடல் பொன்போல் ஒளிர்ந்தது.


அப்பன் சிவப் பெருமான் அம்மை உமையின் தரிசனம் தந்திதேவர் கேட்ட வரம்.

சிவபெருமானையும், உமையம்மையும் கண்டவுடன் தந்திதேவர் அப்பனே! அம்மையே! என கைகளை கூப்பி வணங்கி நின்றார். சிவப் பெருமான் நந்தியிடம் நந்தி நீ எனது பஞ்சாட்சரம் நாமத்தை உன்னை மறந்து ஆழ்ந்து ஜபித்ததால் என்னை ஒத்தவனாகவே விளங்குவாய் என ஆசி வழங்கினார். பின் என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்று சிவபெருமான் கூறினார். 

ஐயனே! வேத, சிவகலை ஆகமங்களையும் அவற்றின் உட்பொருளையும் தாங்களே எனக்கு உபதேசித்து அருள வேண்டும். சிவபெரு மான் நந்திக்கு பஞ்ச நதிகளையும் வரவழைத்து அபிஷேகம் செய்தார். சகல கலை ஞானங்களையும் அறிந்தவனான நீ இன்று முதல் நந்திதேவன் என்று எல்லோராலும் அழைக்கப்படுவாய். இன்னும் வரம் கேள் மகனே என்று சிவபெருமான் கூறியதும், ஜபேஸ்வரனும் ஐயனே! சிவனடியார்கள் விரும்பும் பதினாறு பேறுகளையும் எனக்குத் தந்தருள வேண்டும் என கேட்டான். தந்தோம் என்று கூறி அந்த வரத்தையும் தந்தார். ஆதிமூர்த்தியே! யாம் ரிஷப வடிவில் உம்மைத் தாங்கி உலகை வலம் வர வேண்டும். இதற்கு நீங்கள் அருள்புரியவேண்டும் என வேண்டினான். நந்தீ! உன்னைப் போல தவம் புரிந்தவர் எவருமில்லை. நீ எம்மைப் போல் நித்தியமாக யாவராலும் வணங்கப் பெறுவாய். இந்தக் கணமே ரிஷப உருவம் கொள்வாய்! என வரமளித்தார் சிவபெருமான்! தேவர்களே! இந்த நந்தீசனைச் சகல கணங்களுக்கும் தலைவனாக நியமித்தோம். விநாயகன், முருகன்போல் இவனும் எனக்கு மகன். சிவஞானத்தைப் போதிக்க இவனே ஆச்சாரியான்  என்று சிவபெருமான் கூறினார். உடனே தேவர்கள் அனைவரும் நந்திதேவர் வாழ்க! வாழ்க! என கோஷமிட்டனர்.

ஈசனும் உமையும் திருவையாற்றில் வியாக்ரபாதரின் புதல்வி சுயம்பிரபை என்ற கன்னிகையை திருநந்திதேவருக்கு மணம் செய்து வைத்தனர்.


முடிந்தது பூலோக வாழ்க்கை. 

திருமணத்திற்க்கு பின்பு நந்தீ விதிப்படி உனது பூலோக வாழ்க்கை நிறைவுற்றது உன் தவத்தால் பின்பு சிவபெருமானும் உமாதேவியும் நந்திதேவரையும், சுயம்பிரபை தேவியையும் அழைத்துக் கொண்டு திருக்கயிலைக்கு சென்றனர் நந்தீசா, விதிப்படி உன் பூலோக வாழ்க்கை நிறைவுற்றது. உன் தவத்தால் உன் குல முன்னோர்களும் வீடுபேறு பெற்றார்கள். இனி திருகயிலையில் எம்முடன் நிரந்தர வாசம் செய்வாய் என்று கூறினார். நந்தீசர் சிவபெருமானுக்கும், அம்மையாருக்கும் தாழ்பணிந்து நான் கேட்ட வரத்தை எல்லாம் தந்து அருளிய தங்களுக்கு என் வாழ்நாள் முழுதும் தங்களுக்கு சேவை செய்து உங்களின் திருப்பாதத்திலேயே இருப்பேன் என்றார். இப்படியாகத்தான் நந்தீசர் கைலாயத்தில் நித்தியவாசம் செய்கிறார்.

أحدث أقدم