பொருளடக்கம்
- வீட்டில் ஆன்மீக ரீதியில் பணத்தை ஈர்ப்பது எப்படி 8 முக்கியமான குறிப்புகள்?
- லட்சுமி தேவியின் வீட்டிற்க்கு வர வைப்பது எப்படி. லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை எப்படி பெறுவது.
- வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் வெற்றியையும் கொண்டு வருவது எப்படி.
வீட்டில் ஆன்மீக ரீதியில் பணத்தை ஈர்ப்பது எப்படி 8 முக்கியமான குறிப்புகள்?
அனைத்து மக்களுக்கும் வணக்கம் அனைவரும் பரி பூரண சுகம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட இறைவன் மலர்ச்சிலம்படியை வேண்டுகிறோம்.உலக வாழ்க்கையில் இன்று செல்வம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்று. வாழ்வில் துணிவு, கல்வி, வீரம், விவேகம், வெற்றி, குழந்தைகள், பொன், பொருள், நெல், மங்கா புகழ், நல்ல நட்பு, இளமை, ஆரோக்கியம், நல்லுறவு, இறையன்பு, ஞானம் என பதினாறு வகையிலான செல்வங்கள் உண்டு இவைகளில் அடிப்படையாக ஒவ்வொரும் தேடுவதும் சேர்ப்பதும் தனம் சம்மந்தமான செல்வங்களையே ஆகும். சிலருக்கு எவ்வளவு செல்வங்கள் கிடைத்தாலும் போதுவதில்லை, தேவைகள் அதற்கும் மேலாக வந்து கொண்டே இருக்கின்றன. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கைகளில் தங்குவதில்லை என்ற ஒரு பெருங்குறை நம்மில் பல பேருக்கு உண்டு.
இவையனைத்தும் தாய் லட்சுமி தேவியின் திருவருளின் குறைபாடே காரணம். நாம் தினமும் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் வைத்தும் வழிபாடுகள், பல பூஜைகள் செய்திருப்பினும் நம்மையறியாமல் நாம் கவனிக்க மறந்த சில விஷயங்களே இப்படியான செல்வச் செழுமையின்மைக்கு காரணமாகின்றது.
8 முக்கியமான குறிப்புகள்?- 8 Important Tips on Spirituality?
1) நாம் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுகிறோம். ஆனால் அதில் பலருக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. உண்மையில் விளக்கேற்றுவதில் கண்டிப்பாக ஒரு தெளிவு ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. உங்கள் பூஜை அறையில் நீங்கள் குத்து விளக்கு ஏற்றுவதானால் கண்டிப்பாக இரண்டு, மூன்று அல்லது ஐந்து தீபங்கள் இடுவதுதான் சிறப்பு. சிலர் இரட்டையாய் தீபம் ஏற்றக்கூடாது என்று நினைக்கலாம். ஆனால் இரட்டை தீபங்கள் ஏற்றும் போது எதிரெதிர் திசையை நோக்கி ஏற்றுவது நலமானதாகும். அதைப்போலவே மூன்று தீபங்கள் ஏற்றவகையில் இரண்டு தீபங்கள் எதிரெதிராகவும் ஒன்று விளக்கிற்கு வலது புறமாகவும் தீபமேற்ற வேண்டும். குத்து விளக்கு ஒற்றையாய் ஒளிர்விடுவது சிறப்பானதல்ல. மேலும் குபேர விளக்கு அல்லது லட்சுமி விளக்கு எனக் கூறப்படும் சிறிய வகையிலான விளக்குகள் ஒரு தீபத்திற்கு உறியவைகள் ஆகும்.2)ஒரு வீட்டின் கட்டிட அமைப்புகள் எதுவாயினும், அல்லது வாஸ்து சரிவர அமையாத யாதொரு வாடகை வீடாக இருந்தாலும் வீட்டின் வாசலில் ஒரு கற்பக விநாயகரின் திருவுருவப்படத்தை பொருத்தி வைப்பது உத்தமம். அதோடு சகல வாஸ்து தோஷங்களது தாக்கத்தையும் அது குறைக்கும். மேலும் லட்சுமி தேவியின் திருவுருவப்படத்தையும் பூஜை அறையில் வைத்திருத்தல் அவசியம். அல்லது வீட்டிற்குள் அன்னையின் பார்வை அமையும் படி மாட்டி வைப்பதும் சிறப்புடையது. வீட்டினுள் இருந்து வாசல் பக்கத்தை பார்த்தவாரு ஒரு போதும் இருத்தல் கூடாது.
3) வீடு எப்போதும் சுத்தமாய் இருத்தல் அவசியம். குறைந்த அளவில் ஒரு வீட்டின் பூஜை அறையும், சமையலறையுமாவது கட்டாயம் எப்போதும் சுத்தமாய் வைத்திருத்தல் நலன் பயக்கும். அதே சமயம் பணம் வைக்கும் பெட்டி, பீரோவில் பணம் வைப்பதற்காக இருக்கும் இடங்களை எல்லாம் தோவைப்பட்டால் ஒழிய தினம் தினம் சுத்தம் செய்யக்கூடாது. பணம், நகை என்பதும் லட்சுமி தேவிதான் ஆகவே அவர்கள்இடத்தை நித்தம் சுத்தப்படுத்துவயாய் தொல்லை செய்யக் கூடாது. எப்போதும் தொல்லை இருக்கும் இடங்களில் யாரும் அமர்ந்திருக்க நினைக்க மாட்டார்கள். பூஜைக்கான உபகரணங்களை எல்லாம் சுத்தமாய் பயன்படுத்துவதே முறையாகும்.
4) மஞ்சள், உப்பு, ஊறுகாய் போன்றவை எப்போதும் நிறைவாகவே வீடுகளில் வைத்திருக்க வேண்டும். காரணம்! உப்பும், ஊறுகாயும் குபேர பகவானுக்கு பிடித்தமாவை எனவே இவை பயன்படுமோ இல்லையோ எப்போதும் நிறைவாகவே வைத்திருப்பது நல்லது. அதைப்போலவே மஞ்சள் எப்போதும் வீட்டில் இல்லை என்ற நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5) வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி விட்டு வெருமையாக தூங்குவதும் தவறானதாகும். விளக்கொளியில் லட்சுமித் தாயின் அம்சம் நிறைந்திருக்கும். எனவே வீட்டிற்க்கு அன்னை வருகையில் வீட்டில் அனைவரும் தூங்கிய படி மந்தமாய் இருந்தால் அங்கு அன்னை இருக்க விரும்பமாட்டாள். ஆகவே மாலையில் விளக்கேற்றிய பின் காரணமின்றி தூங்குவதை தவிர்ப்பது நல்லது.
6) அதைப்போலவே விளக்கு எரிந்து முடிந்து எண்ணெய் இன்றி தானாக அணையும் படி விடுதலும் கூடாது. எப்போதும் எண்ணெய் நிரம்பப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைப் போல விளக்கை அமர்த்த முயலுகையில் வாயால் ஊதி அமர்த்துதல் முறையற்றது. கையால் வீசியோ அல்லது திரியினை எண்ணெய்யில் மூழ்கடித்தோ அமர்த்தலாம்.
7) வீட்டில் மாலை விளக்கேற்றியப் பிறகு வீட்டைப் பெருக்குவதோ, சுத்தப்படுத்தி குப்பைகளை அப்புறப்படுத்துவதோ கூடாது. இது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்தே. இது பெரியோர்கள் நமது கவனக் குறைவினை தவிர்க்க, ஆன்மீகத்தோடு கலந்து கூரிய அறிவுரை. அதைப்போலவே மாலை வேளையில் விளக்கேற்றியப் பின் பணம் போன்ற தனங்கள் வீட்டை விட்டு வெளியில் போகாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
8) வீட்டில் பெண்கள் தலைவாரும் பொழுது உதிர்கின்ற முடிகளை அப்புறப்படுத்த படவேண்டும். அப்படி கவனிக்காமல் முடிகள் வீட்டில் தோங்குவது துரதிஷ்டத்திர்கு வகை செய்யும். எனவேதான் முடி வெட்டியவர்கள் தலைக்கு குளிக்காமல் வீட்டினுள் செல்லக்கூடாது என்பார்கள். அதைப் போல பெண்கள் தலைவிரிக் கோலமாக வீட்டில் இருந்தாலும் அப சகுனமானதாகும். மேலும் நாட்கள் கணக்கில் வீட்டினுள் அப்புரப் படுத்தாமல் வைத்திருக்கும் குப்பைகள், நாள் கணக்கில் துவைக்காமல் வைத்திருக்கும் அழுக்கு துணிக் குவியல்களும் வீட்டில் செல்வம் சேர்வதை தடை செய்யக் கூடியதாகும்.
இப்படி பல வழிமுறைகளும் வீட்டில் செல்வம் சேருவதற்காக பின்பற்றப் பட வேண்டியவைகள் ஆகும். இவை சான்றோர்களும், நமது மூதாதையர்களும் ஆன்மீக மற்றும் வாழ்வியல் ரீதியாக அவர்கள் அனுபவத்தின் பேரில் கூறிய அறிவுரைகள். இவற்றை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி செல்வச் செழுமையும், லட்சுமி தேவியின் கடாட்சத்தையும் பெறுவோம். எல்லோரும் இன்புற்று வாழ இறைவன் தாழ் பணிந்து வேண்டுகிறோம்.
லட்சுமி தேவியின் வீட்டிற்க்கு வர வைப்பது எப்படி. லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை எப்படி பெறுவது.
செல்வம் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மனித வாழ்க்கையில் செல்வம் ஒரு பகுதியாகும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அனைத்து இந்து கடவுள்களிலும் லட்சுமி தேவிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வயது, ஜாதி மற்றும் குழு வேறுபாடின்றி அனைத்து மக்களும் தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்புகிறார்கள்.
இருப்பினும் லட்சுமி தேவி மிகவும் நிலையற்றவர் தேவி இயக்கத்தில் இருக்க விரும்புகிறாள். அவள் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முனைகிறாள். லட்சுமி தேவியை ஒரு இடத்தில் தங்க வைப்பதற்கு அதிக முயற்சியும் அருளும் தேவை.
லட்சுமி தேவியை வழிபடுவது தனிமனித வாழ்வில் செல்வத்தையும் வளத்தையும் வரவேற்கிறது. லட்சுமி தேவியின் கதையின்படி, ஒரு நபரின் வாழ்க்கையில் அவர் 16 வகையான செல்வங்களை வழங்க முடியும்.
துல்லியமாகச் சொல்வதானால் தேவியிடம் நீங்கள் எதிர்பார்க்கக்கூடியது:
1) புகழ்,
2) அறிவு,
3) தைரியம்,
4)வலிமை,
5) வெற்றி,
6) நல்ல குழந்தைகள்,
7) வீரம்,
8) தங்கம்,
9) ரத்தினங்கள் பிற மதிப்புமிக்க பொருட்கள்,
10) தானியங்கள்,
11) மகிழ்ச்சி,
12) புத்திசாலித்தனம்,
13) அழகு,
14) உயர்ந்த நோக்கம் மற்றும் உயர்ந்த சிந்தனை,
15) ஒழுக்கம்,
16) நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள்.
இவை அனைத்தையும் பக்தர்கள் தேவியிடம் வேண்டி அருளையும் பெற நினைக்கிறார்கள்.
லட்சுமி தேவியின் அருளைப் பெற தேவி இந்து வீடுகளில் மிகவும் வணங்கப்படுகிறார் அல்லது கொண்டாடப்படுகிறார்.
எல்லா நாட்களிலும், வெள்ளிக்கிழமை ஸ்ரீயை வழிபட உகந்த நாள். மேலும், நவராத்திரியின் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது நாள், உங்கள் வாழ்க்கையில் தேவியை மகிழ்விப்பதற்கும் அவளிடம் ஆசீர்வாதங்களைக் கேட்பதற்கும் சிறந்த நாட்களாகக் கருதப்படுகிறது.
இந்த கட்டுரையை உருவாக்கும் முன்பாக லட்சுமி தேவியை மகிழ்விப்பதற்கும், அவளை உங்கள் இடத்திற்கு அழைப்பதற்கும் சில குறிப்புகளை நாங்கள் சேகரித்தோம் அவற்றை மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
எப்போதும் தூய்மையை பராமரிக்கவும்.
லட்சுமி தேவி தூய்மையைப் போற்றுகிறாள். எல்லா வகையிலும் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாக இருக்கும் இடத்தில் அவள் வசிக்கிறாள். அவள் அமைதியான அழகான மற்றும் அதிர்வுகளில் தூய்மையான இடங்களில் தங்க விரும்புகிறாள். எனவே தேவியை உங்கள் வீட்டிற்கு வரவேற்க. உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் சுத்தம் செய்ய வேண்டும்.பொருட்களை சரியான நிலையில் வைத்து வீட்டில் உள்ள குப்பை அல்லது அதிகப்படியான குப்பைகளை அகற்ற வேண்டும் எப்போதும் தூய்மையாக இருப்பதே தேவியின் அருளைப் பெறும் வழி.
வரவேற்கத்தக்க நுழைவாயில் வேண்டும்.
லட்சுமி தேவி உங்கள் பிரதான வாசல் வழியாக உங்கள் வீட்டிற்கு வருகிறார். பிரமாண்டமான மற்றும் அழகான நுழைவாயில் தேவியை ஈர்க்கிறது, மேலும் அவள் வசிக்க உங்கள் வீட்டிற்குள் நுழைகிறாள்.உங்கள் நுழைவாயிலில் ரங்கோலி கோலம் போடுவது பற்றி உங்கள் பெரியவர்களிடம் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ரங்கோலி கோலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்த லட்சுமி தேவிக்கு விருப்பமான சிவப்பு, தங்கம் மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தவும்.
சிலர் அசோக மரம் அல்லது மா மர இலைகள் தோரணங்களை பிரதான கதவை வரவேற்கும் வகையில் பயன்படுத்துகின்றனர்.
அலங்கரிக்க தாமரை பயன்படுத்தவும்.
தாமரை லட்சுமி தேவிக்கு மிகவும் நெருக்கமானது, அது தேவிக்கு மிகவும் பிடித்தமான மலர். அவள் அதை எப்போதும் தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். எனவே, உங்கள் வீட்டை அலங்கரிக்க தாமரை மலர்களைப் பயன்படுத்தினால். லட்சுமி தேவி நிச்சயம் உங்கள் இடத்திற்கு வருவாள்.தாமரை தூய்மை மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது. உங்கள் பூஜை அறையில் தாமரை மலர்களை வைத்து லட்சுமி தேவியின் மந்திரத்தை உச்சரிக்கலாம், இதனால் உங்கள் இதயம் தூய்மை, அன்பு மற்றும் கருணை நிறைந்ததாக இருக்கும்.
உங்கள் பூஜை அறையில் ஸ்ரீ லட்சுமி யந்திரத்தை நிறுவவும்.
இந்து புராணங்களில் ஏராளமான யந்திரங்கள் உள்ளன. அவற்றுள் ஸ்ரீ லட்சுமி யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் மேன்மையானது. விதிகளின்படி முறையாக வழிபட்டால், அது உங்கள் வீட்டிற்கு செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.வீட்டில் லட்சுமி புகைப்படத்தை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?
செல்வத்தை குறிக்கும் என்பதால் வடக்கு திசையில் வைக்கவும்.கடவுளுக்கு சேவை செய்யும்போது ஸ்ரீபால் (தேங்காய்) பயன்படுத்தவும்.
இது என்னடா ஸ்ரீபால் என்று யோசனை வேண்டாம் தேங்காயின் மற்றொரு பெயர் ஸ்ரீபால். லட்சுமி தேவி தேங்காயை பூஜையில் பயன்படுத்த விரும்புகிறார் தேங்காய் புனிதமானதாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. லட்சுமி தேவியை வழிபடும் போது தேங்காயை பயன்படுத்தினால் அது தேவியை மகிழ்ச்சியடைய செய்யும் என்பது ஐதீகம்.உங்கள் வீட்டில் மோதி சங்கு இருக்க வேண்டும்.
மோதி சங்கு என்பது முத்துக்களின் பொலிவுடன் கூடிய ஒரு வகையான சங்கு. இந்த சங்கு ஒரு அரிய வகை மற்றும் இந்து புராணங்களில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த வகையான சங்கு அது வசிக்கும் இடத்தில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும் நேர்மறையான தாக்கங்கள் அல்லது சக்திகளைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த சங்கு லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். எனவே, லட்சுமி தேவியை உங்கள் வீட்டிற்கு அழைக்க விரும்பினால், மோதி சங்கை கட்டாயம் வாங்கி வைத்திருங்கள்.சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சுத்தமான துணியில் சுற்றி வைக்க மறக்காதீர்கள்.
துளசி பூஜை செய்யுங்கள்.
துளசி ஸ்ரீயை குறிக்கும் மிகவும் மங்களகரமான தாவரமாக கருதப்படுகிறது. தினமும் தீபம் ஏற்றி வழிபடுவது செழிப்பையும் செல்வத்தையும் தரும்.துளசியை வழிபடும் ஒவ்வொரு வீட்டிலும் அனைத்து கடவுள்களின் ஆசீர்வாதமும் இருக்கும். லட்சுமி தேவியை அழைக்க அல்லது கவர உங்கள் வீட்டின் வெளியே ஒரு துளசியை நட்டு அதன் அருகில் விளக்கை ஏற்றி வாருங்கள்.