கோட்டையின் சிறப்பு.
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த வட்டகோட்டை கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. நாஞ்சில் நாட்டின் பாதுகாப்பு அரணாக மார்த்தாண்டவர்மவால் வட்டகோட்டை கட்டப்பட்டது. செவ்வக வடிவில் வட்டகோட்டை கட்டப்பட்டுள்ளது இந்த கோட்டை மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வட்டகோட்டையின் மதில் சுவர்கள் 25 முதல் 26 அடி உயரம் கொண்டவையாக அமைத்து இருக்கிறார்கள். வட்டகோட்டையின் முன்புற சுவர் 29 அடி அகலமும் பக்கவாட்டில் மூலைகளில் 18 அடியும், பின்புறம் 6 அடி அகலமும் கொண்டுள்ளது. வட்டகோட்டையின் ஒரு பகுதி கடலில் பரவியுள்ளது.
வட்டகோட்டை பற்றிய வேறு தகவல்கள்.
வட்டகோட்டை மார்தாண்டவர்மர் ஆட்சியில் டி லெனோய் என்பவரின் ஆலோசனையில் கட்டப்பட்டதாகும். டி லெனோய் இவர் டச்சுகாரர்களின் படை தளபதியாவர் 18-ம் நூற்றாண்டில் டச்சுகாரர்களுக்கும் மார்தாண்டவர்மா மகாராஜாவுக்கும் போர் நடைப் பெற்றது. அந்த போரில் டச்சுகாரர்கள் தோற்கடிக்கபட்டு மர்தாண்டவர்மால் பலர் சிறைபிடிக்கப்பட்டனர் அவர்களில் ஒருவர் தான் டி லெனோய் பின்னர் இவர் மகாராஜாவின் நம்பிக்கைக்குரியவராக மறினார் அதன்பின் திருவாங்கூர் சமஸ்தான படைவீரர்களுக்கு ஐரோப்பிய போர் தந்திரங்களையும் போர் முறைகளையும் கற்றுக் கொடுத்தார். இவரின் உண்மையான விசுவாசத்தை கண்ட மகாராஜா இவரை தனது படை தளபதியாக பணியில் அமர்த்தினார்.
இவரின் கல்லறை குமரியில் இன்னொரு சுற்றுலா தலமான உதயகிரி கோட்டையில் உள்ளது. இந்த உதயகிரி கோட்டை மார்தாண்ட வர்மா மகாராஜாவின் ஆயுதங்களை செய்யும் இடமாகும் இங்கே தான் தளபதி டி-லெனோய் உதவியோடு பீரங்கி, பீரங்கி குண்டுகள், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உருவாக்கப்பட்டது. அந்த ஆயுதங்களை செய்ய இரும்புகளை உருக்குவதற்காக உருவாக்கபட்ட பெரிய அடுப்புகளின் சிதிலங்கள் இன்னும் உதயகிரககோட்டையில் இருக்கிறது.
வட்டகோட்டையில் தான் திருவாங்கூர் படை வீரர்களுக்கு டி-லெனோய் போர் பயிற்சி கொடுத்துவந்தார்.
மேலும் அந்நிய நாட்டினரின் ஊடுருவலை கண்காணிக்க இந்த கோட்டையை பயன்படுத்தினார்கள்.
1889-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தோடு போர் செய்த போது இந்த கோட்டை தாக்கபட்டது அந்த போரில் திருவாங்கூர் மகாராஜா தோற்கடிக்கபட்டார். நடந்து முடிந்த ஆங்கிலேயப் போரில் வட்டகோட்டையின் சில சுவர்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்தது. திரும்பவும் வட்டகோட்டை மறுசீரமைக்கபட்டு தற்போது சுற்றுலாதலமாக மாற்றப்பட்டுள்ளது.
வட்டகோட்டை இந்திய தொல்பொருள் துறையின் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட தளமாக மாற்றபட்டுள்ளது. வட்டகோட்டை கன்னியாகுமரியில் வரலாற்றை தாங்கி நிற்க்கும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
வட்டகோட்டை அமைந்துள்ள இடத்தினை பார்ப்போம்.
இப்பகுதி கன்னியாகுமரியிலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வட்டகோட்டை கடல் பகுதி மிகவும் அமைதியானது. வட்டகோட்டையில் நிற்று கொண்டு கடற்கரையை பார்ப்பதற்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. வட்டகோட்டையின் பக்கத்திலுள்ள சிறு ஆறு, மற்றும் பச்சை தாவரங்கள் கோட்டையின் அழகான இயற்கைக்காட்சிக்கு மேலும் அழகு சேர்கிறது. நீங்கள் கன்னியாக்குமரி வந்தால் கண்டிபா இந்த சுற்றுலா தலத்தை பார்க்காமல் போகாதீர்கள்.