வீட்டில் கெட்ட எண்ணங்கள் வருகிறதா தடுக்க முக்கியமான வாஸ்து குறிப்பு.

 If you have bad thoughts at home then do this. Important Vaasthu Tips For Home..

vaasthu tips for your home in Tamil 2022

நாம் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தான் எல்லா அம்சமும் பொருந்திய அருமையான வீடுகளை வாஸ்து சாஸ்திர படி கடவுளின் அனைத்து அருளும் கிடைக்கும் வகையில் உருவாக்கி அதில் வசிக்கிறோம் அந்த வீடு சரியாக இருந்தால் நமது எண்ணங்களும் சரியாக இருக்கும் அல்லது அந்த வீடோ வீட்டில் உள்ள பொருட்களோ சரியான வகையில் அமையவில்லை என்றால் அது அந்த வீட்டில் வசிக்கும் நேர்மறையான எண்ணங்களை கொடுக்கும். இதைத் தான் வாஸ்து சாஸ்திரமும்  பல கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கிறது.  

இதனால் தான் நமது வீடு மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் பொருட்களுக்கும் நம் எண்ணங்களை தூண்டி விடக்கூடிய ஆற்றல்கள் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது வீட்டில் நேர்மறை எண்ணங்களை உருவாக்க கூடிய பொருட்களை வைக்காமல் இருப்பது வீண் பிரச்சனைகள் தேவையில்லாத குழப்பங்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்கிறது.

தற்போதைய சூழலில் ஒவ்வொருவரும் வீட்டின் வாஸ்து மற்றும் கட்டிட அமைப்புகளிலும் கவனமாகக் தான் இருக்கிறோம், இப்படி எல்லா வகையிலும் கவனமாக இருந்தும் கடவுளின் மீது முழுமையான பக்தி இருந்தும் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருள்கள் மீது கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

veetil naam vaika kudatha porulkal

வீட்டிலுள்ள பொருட்கள் நம் வாழ்வில் பிரச்சினையை ஏற்படுத்துமா?

ஆம் வீடுகளில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களும் நமது இன்ப துன்பங்களுக்கு காரணமாய் அமையலாம். நாம் தினந்தோறும் வீடுகளில் முன்னும் புறமும் நடக்கையில் பார்க்கின்ற, வைத்திருக்கின்ற, பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருட்களுக்கும், நமக்கும் மனதோடு சம்மந்தப்பட்ட உணர்வலைகள் உண்டு என்றும், அவைகளின் அதிர்வுகள் கூட நமது சுக துக்கங்களுக்கு காரணமாகின்ற தன்மை உண்டு என அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக பலர் கூறுகின்றனர். 

அப்படி பட்ட பொருட்களை அப்புறப் படுத்துகையில் பல மாற்றங்கள் மன ரீதியாக மாறி நல்லப் பலன்களை தருவதை நம்மால் காண முடியும். அப்படி ஒருபோதும் வீடுகளில் வைத்திருக்க கூடாத பொருள்கள் சிலவற்றை காண்போம்.

வீட்டில் ஒருபோதும் வைக்கக்கூடாத எதிர்மறை எண்ணங்களை உருவாக்க கூடிய நான்கு பொருட்கள். 

 4 Things that can create negative thoughts that you should never keep in your home..

 1) முதலில் பூஜை அறையில் நீங்கள் பயன்படுத்தும் பூஜை பொருள்கள் இருப்பில் உருவாக்கபட்டவையாக இருக்க கூடாது. இரும்பு எமனுக்கு உகந்த உலோகப் பொருளாய் விளங்குவதால் அதனைப் பயன்படுத்தி பூஜை புரிவது விசேசமாகாது. எனவே பெரும்பாலும் நல்ல அலையதிர்வுகளை உண்டாக்க கூடிய செம்பு, பித்தளை, தாமிரம், வெண்கலம் அல்லது ஈயம் போன்ற உலோகங்களால் ஆனால் பூஜை பொருட்களை பயன்படுத்தினால் சிறப்பானதாக அமையும். 

2) பலர் வீடுகளில் ஓவியங்களும், புகைப்படங்களும் அதிகமாக அழகு படுத்துவதற்காக மாட்டி வைப்பார்கள். அதிலும் கவனமாக இருப்பது அவசியம். வீட்டில் மாட்டி வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்கள் அல்லது புகைப்படங்கள் இயற்கை சூழல் மிகுந்ததாக அல்லது நமது புகைப்படங்களாக இருக்கலாம். ஆனால் இருளடைந்த காடுகள், இரவு நேர பரந்த கடல் பரப்பு, தீப்பற்றி எரிகிறது போன்ற புகைப் படங்கள், அழுகின்ற குழந்தை அல்லது அழுகின்ற பெண் இப்படி அழுது கொண்டு இருக்கிற எந்த புகைப்படமும் வீட்டில் வைக்க கூடாது மற்றும் விலங்குகள் வேட்டையாடுகின்ற படங்கள் அல்லது கோரமாய் பாய்கின்ற படங்கள் போன்றவை எப்போதும் அழகுக்காகவோ அல்லது வேறு எதற்காகவும் மாட்டி வைப்பது நல்லதல்ல. அதிலும் தனிமையில் ஒரு பெண் அல்லது குழந்தை பெரிய பரந்த இடத்தில் நிற்பது போன்ற படங்களையும் தவிர்ப்பது நல்லது. சரி அப்படியாயின் நல்ல அதிர்வலைகளை உருவாக்க எல்லா இடங்களிலும் தெய்வங்களின் திருவுருவப்படத்தை மாட்டலாம் என்றாலும் தவறு. சில தெய்வங்கள் வீட்டில் அந்தந்த, அதற்கான இடங்களில் இருப்பதே ஆகச் சிறந்தது. உதாரணமாக கற்பக விநாயகர் திருவுருவப்படத்தை வீட்டின் வாசலில் வைப்பதே நலமாகும். மேலும் நீங்கள் மாட்டி வைக்கும் சுவரின் பின்புறம் கழிவறைகள், கழிவு வடிகால் பாயும் இடமாக இருத்தல் கூடவே கூடாது. மேலும் வீட்டில் படிக்கின்ற அல்லது பணி செய்கின்ற இடங்களில் அழகான பூக்கள், பச்சை பசேரென்ற வயல் வெளிகள் மேலும் மனதை புத்தணர்வாக்கக் கூடிய படங்களையோ, ஓவியங்களையோ மாட்டி வையுங்கள். மேலும் படிக்கின்ற கடவுள்களாய் கருதப்படும் கிருஷ்ண பரமாத்மா, புத்த பகவான் போன்ற கடவுள்களையும் மாட்டிக் கொள்ளலாம். 

3) ஓடாத கடிகாரங்கள் ஏதாயினும் பழுது நீக்கி வைப்பது சிறப்பு. ஓடாத கடிகாரங்கள் வீட்டில் இருப்பதனால் தரித்திரியம் ஏற்படுத்தும் அறிகுறி ஆகும். இது வீடுகளுக்கு மட்டுமல்ல வேலை செய்யும் இடங்களில், அலுவலகங்களிலும் சரி ஒருபோதும் ஓடாத கடிகாரங்களை மாட்டி வைக்காதீர்கள். 

4) வீட்டை அழகு படுத்துவதற்காக இன்றைய காலத்தில் பலர் எதை எதையோ வீட்டிற்குள் கொண்டு வந்து வைக்கத் தொடங்கிவிட்டனர். அப்படிப் பட்டப் பொருட்களுள் கண்ணைக் கவரக்கூடிய கூடிய வகையில் பூக்கள் பூப்பதால் பலர் சில சிறிய ரக முள் கள்ளிச் செடிகளையும் நடு வீடு வரை கொண்டு சென்று வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இன்னும் சிலர் படிக்கும் மேஜையிலும் அல்லது அலுவலக மேஜையிலும் வைத்து அழகு பார்க்கின்றனர். முள் கள்ளிச் செடிகள் பாலைவனத்திற்கும், காட்டிற்கும் உரித்தானவை. ஆகவே அவைகளை வீட்டினுள் வளர்ப்பது உகந்ததல்ல மேலும் தேவையி்ன்றி மண்ணை வீட்டிற்க்குள் கொண்டு சென்று முள் செடிகளை வளர்ப்பது வேண்டாம். 

4) உங்கள் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் அல்லது வேறு ஏதாவது கண்ணாடிகள் பொருள்கள் அல்லது கண்ணாடியில் செய்த கைவினைப் பொருள்கள் எதுவாயினும் உடைந்த, விரிசல் விட்ட அல்லது நொருங்கிப் போயிருப்பின் அதனை நிச்சயமாக அப்புறப் படுத்துவது நல்லது. அந்த பொருள்கள் மிகவும் முக்கியமான நியாபகச் சின்னமாய் இருப்பினும் சரி பழுது பட்டிருப்பின் அதனை அகற்றுவது வீட்டிற்க்குள், குடும்பத்திற்கும் நல்லது. மேலும் பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் திருவுருவப்படங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்திருப்பின் அதனை சரி செய்து அல்லது கண்ணாடியை மாற்றி பூஜிப்பது அவசியம். இல்லையேல் எதிர்மறையான பலனைக் கொடுக்கும்.

மேற்கண்ட அனைத்துமே நமது வீடுகளில் இருக்குமாயின் அவை மறைமுகமாய் நமது எண்ணங்களிலும், சூழலிலும் எதிர்மறையாய் செயல்பட்டு தீமைகள் விளைவிப்பவை. எனவே நமது அன்றாட வாழ்வில் இம்மாதிரியான கண்டுணர வேண்டிய விஷயங்களிலும் சிறிது கவனம் செலுத்தி அந்த தீய விளைவுகளை தவிர்த்து, நல்வாழ்க்கை வாழ்வோமாக.

புதியது பழையவை